Posts

Showing posts from June, 2021

யார் பக்கம் செல்வது? காத்திருக்கும் பன்னீர்செல்வம்

Image
யார் பக்கம் செல்வது? காத்திருக்கும் பன்னீர்செல்வம் June 7, 2021 7:00 amPublished by Twenty4 Chennai அதிமுகவை கைப்பற்ற சசிகலா தாக்குதலை தொடங்கியிருக்கும் நேரத்தில், கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் மதிப்பு கூடத்தொடங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சமரசம் செய்து கொள்ள விரும்பாத பன்னீர்செல்வம், வரும் நாட்களில் எந்த பாதையில் செல்வது என முடிவெடுக்க நீண்ட யோசனையில் இருந்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது. எனினும் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றி முதல் ரவுண்டில் பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டினார். ஆனாலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்தை அவ்வளவு எளிதாக தோற்கடித்துவிட முடியாது என்பதை எடப்பாடி உணர்ந்தே உள்ளார். எனவே தற்போது அமைதியாக காய் நகர்த்துவதே உசிதம் என அவர் எண்ணுகிறார். ஆனால் சசிகலாவின் அதிமுகவை கைப்பற்றும் மறுமுயற்சிகள் எடப்பாடியை டென்ஷனுக்கு உள்ளாக்கியுள்ளது. அரசியலில் ஜூனியரான எடப்பாடி பழனிசாமி தன்னை இவ்வளவு எளிதாக ஓரம்கட்டுவார் என பன்னீர்செல்வம் முதலில் எண்ணவில்லை. கடைசி சு...